Saturday, 16 September 2017

Spiritual Test (ஆவிக்குரிய நிலை எப்படி?)

1. நான் இன்று யாராகிலும் ஒருவரை தீமையாக பேசினேனா அல்லது சிந்தித்தேனா?

2. நான் இன்று ஏதாவது வீணான வார்த்தைகளை பேசினேனா?

3. நான் பெருந்தீனிக்கோ அல்லது சோம்பேறிதனத்திற்கோ அல்லது ஏதேனும் அசிங்கமான இச்சைக்கோ ஈடுபடுத்திக்கொண்டேனா?

4. நான் இன்று யாரிடமாவது சுயநலமாய் நடந்து கொண்டேனா?

5. நான் யாரேனும் ஒருவரின் வீழ்ச்சியைக் கண்டு மகிழவோ அல்லது அதைப்பற்றி அக்கறையற்றவனாகவோ இருந்தேனா?

6. நான் இன்று தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையுமே முதலாவது தேடினேனா?

7. நான் நன்மை செய்வதற்கும் கிறிஸ்துவுக்காக சாட்சிபகர்வதற்க்கும் சந்தற்ப்பங்களை எதிர்நோக்கித் தேடினேனா?

8. நான் இன்று தேவனுடைய அன்பையும் அவருடைய வல்லமையையும் அல்லது அவருடைய ஆளுகையையும் சந்தேகித்தேனா?

9. நான் செய்து முடித்த ஏதேனும் காரியத்திற்காக பெருமை கொண்டு இருக்கிறேனா?

10. நான் இன்று ஏதேனும் ஒன்றிற்காக மனம் தளர்ந்தேனா அல்லது சோர்வுற்றேனா?

11. நான் எவ்வித பக்தி விருத்தியும் அல்லது பிரயோஜனமுற்ற ஏதாகிலும் ஒன்றைப் பேசினேனா அல்லது செய்தேனா  ?

12. நான் பிறர் எனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புவுவேனோ அதையே அவர்களுக்கு செய்தேனா?

13. நான் பிறருடைய விஷயங்களை  மாம்ஷுகமாய் தோண்டி விசாரிக்கிறவனாகவோ அல்லது வீண் அலுவல்காரனாகவோ இருந்தேனா ?

14. நான் இன்று ஏதேனும் பிரையோஜனமற்றவைகளுக்காக பணத்தை வீணடித்தேனா ?

15." என்னை நம்பி எனக்காக மாத்திரம்" சொல்லப்பட்ட விஷயங்களை நான் பிறரிடம் சொன்னேனா ?

16. நான் இன்று யாரேனும் ஒருவரிடம் பொறுமையற்றிருந்தேனா?

17. நான் சமுதாயத்தில் தாழ்ந்தவர்களையும், என் வேலைகாரர்களையும் எவ்வாறு நடத்தினேன் ?

18. நான் என்னை சுற்றியுள்ளவர்களிடம் ஊக்குவிக்கும் வார்த்தைகளையும் அல்லது உற்சாகமான பாராட்டுதலையும் பேசியிருக்கிறேனா?

19. நாள் இன்று என் குடும்பத்தாரிடம் என் அன்பை காட்டினேனா?

20. "எல்லோரைக்காட்டிலும் நானே விசேஷித்தவன்" என இன்று எண்ணியிருந்தேனா ?

21. நான் இன்று யாராகிலும் ஒருவரை... என் சிந்தையிலும்கூட நியாயம் தீர்த்தேனா?

22. நான் என் இதயபூர்வமாய் முற்றிலும் மன்னிக்காமல் யாரேனும் இருக்கிறார்களா ?

23. நான் பிறரைக் குறித்து சொல்லப்பட்ட தீமையான விஷயங்களை அவை உண்மைதானா என சோதிக்காமலே நம்பிவிட்டேனா?

24. இன்று முழுவதும் என் சிந்தைகள் தூய கற்புள்ளதாய் இருந்தாதா?

25. நான் என்னை பகைத்தவர்களுக்காகவும் என்னை துன்புறுத்தினவர்களுக்காகவும் ஜெபித்தேனா?
26. நான் இன்று யாராகிலும் ஒருவரிடம் பொறாமை கொண்டேனா ?

27. நான் என் சக விசுவாசிகளை மேன்மையாய் எண்ணி அவர்களில் மகிழ்ந்திருந்தேனா ?

28. நான் என் சகோதரர்களின் ஆவிக்குரிய மற்றும் சரீர தேவைகளுக்காக அக்கறை காட்டினேனா ?

29. நான் என்னையறியாமலே யாருக்காவது தீங்கிழைத்திருப்பேனா?

30. நான் சொன்ன என் வார்த்தைகளையும் கொடுத்த வாக்குகளையும் நிறைவேற்றினேனா ?

31. நான் இன்று சந்தித்த அனைவருக்கும் ஒர் வேலைக்காரனாகவே இருந்தேனா?

32. நான் என் ஒவ்வொரு கவலைகளையும் பாரங்களையும் ஆண்டவர் மீதே வைத்திருந்தேனா?

33. நான் இன்று எந்தவொரு மனுஷனின் அபிப்பிராயங்களையாகிலும் நாடித்தேடினேனா ?

34. நான் இன்று ஏதேனும் நேரத்தை வீணடித்தேனா ? அல்லது நான் இந்நாளை பயனுள்ளதாய் செலவழித்தேனா ?

35. இன்று தேவன் என்னிடம் பேச விரும்பியதை கேட்பதற்கு நான் விழிப்புடன் இருந்தேனா ?


36. நான் என்னால் முடிந்த மட்டும் ஆடம்பரத்தைத் தவிர்த்து எளிமையாய் வாழ்ந்திட முயற்ச்சித்தேனா ?

37.நான் இன்று என் பிதாக்களிடத்தில் ஏதேனும் ஆவிக்குரிய பிரயோஜனமான காரியங்களை கலந்துரையாடினேனா ?

38. நான் இன்று என் மனைவியின் (கணவனின்) வேலையில் உதவி புரிய முயற்சித்தேனா ?

39. நான் பெற்ற அதே வெளிச்சத்தை பெறாத யாரேனும் ஒருவரை அலட்சியம் செய்தேனா?

40. என் இருதயத்தில் யாரேனும் ஒருவரைக்குறித்தாவது ஏதாகிலும் கெட்ட சிந்தையுள்ளதா ?

No comments:

Post a Comment